pillaiyaar_sweden
நல்வரவு

எமது ஆலயத்துக்கு வருகைதர...

சுவீடன் ஸ்ரீ சித்தி விநாயகரை தரிசிக்கவும் மற்றும் எமது ஆலயம் பற்றி தெரிந்துகொள்ளவும் பல சமூகத்தினர்
வருகை தருவது வழக்கமாகும். அதுபோல் நீங்களும் எம்மைத் தொடர்பு கொண்டு அதாவது நிர்வாகத்தை தொடர்புகொண்டு
வருகைதர விரும்பும் நாள், நேரம் என்பவற்றை தெரியப்படுத்துவதன் மூலம் உங்களுக்கான சேவையை நாங்கள் திறம்படச் செய்ய உதவியாக இருக்குக்கும். மேலும் எமது ஆலயத்தின் விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

Read More
விதிமுறைகள்

எமது ஆலயத்தினுள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள்

சைவ சமயம்

எமது ஆலயத்திற்கு வருகைதரு முன் சைவசமயம் அல்லது இந்து சமயம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

சைவ சமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படும் நெறி, சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். இன்றைய இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றாக அமைந்துவிளங்கும் சைவம், வைணவத்தைை பின்னால் தள்ளி இந்து சமயத்தின் பெரும்பான்மையான பின்பற்றுநர்களைக் கொண்ட சமயமாகக் காணப்படுகின்றது. இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று சொல்கின்றது.

திருக்கயிலையில் நந்தி தேவர் பணிவிடை செய்ய, பிள்ளையாரும் முருகனும் அருகிருக்க பார்வதி துணையிருக்க வீற்றிருக்கும் சிவபிரானே சைவர்களின் பரம்பொருளாக விளங்குகின்றார். பொ.பி 12ஆம் நூற்றாண்டில் தன் உச்சத்தை அடைந்திருந்த சைவநெறி, ஆப்கானிஸ்தான் முதல் கம்போடியா வரையான தெற்காசியா - தென்கிழக்காசியா முழுவதற்குமான தனிப்பெரும் நெறியாக விளங்கியமைக்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, நேபாளம், காஷ்மீர், தமிழீழம், மலேசியா முதலான பகுதிகளின் முதன்மையான சமயமாக சைவமே திகழ்கின்றது.

 • பிரகாரம் வலம் வரும்போது வேகமாக நடக்கக்கூடாது.
 • வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசக்கூடாது.
 • சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்து போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல், பொடி போடுதல் கூடாது .
 • பிறப்பு, இறப்பு தீட்டுகளுடன் செல்லக்கூடாது.
 • கோவிலுக்குள் குளிக்காமல் செல்லக் கூடாது.
 • சன்னதியில் தீபம் இல்லாமல் தரிசிக்க கூடாது.
 • கோவிலுக்குள் சென்று வீடு திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது, சிறிது நேரம் அமர்ந்த பின்னர் கழுவலாம்.
 • கோவிலுக்குள் நுழைந்தும் முதல் வெளியே வரும் வரை நிதானமாக, அவசரமின்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமச்சிவாய மந்திரம் கூறி வழிபடுவது நலம் பயக்கும்.
 • கோவிலில் நுழையும் பொழுதும் திரும்பி வரும் பொழுதும் கோபுர தரிசனம் அவசியம் செய்ய வேண்டும்.
 • ஸ்தல விருட்சங்களை இரவில் வலம் வருதல் கூடாது.
 • மூலவர் அபிஷேக நேரங்களில் பிரகாரங்களில், வலம் வரக்கூடாது, மூலவர் அபிஷேக நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் ஆலய மணி அடிக்க கூடாது.
 • தலையில் தொப்பி, முண்டாசு அணியக்கூடாது.
 • கொடி மரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழலை மிதிக்க கூடாது.
 • ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது.
 • மேலே துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.
 • கைலியுடன் தரிசனம் செய்யக் கூடாது, படியில் தீபம் ஏற்றுக் கூடாது.
 • ஆலயத்தினுள் உயர்ந்த ஆசானத்தில் அமரக் கூடாது.
 • பலி பீடாதிற்கு உள்ளே சன்னிதியில் மற்றவரை வணங்க கூடாது.
 • கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்க கூடாது.
 • ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது, பிறர் சிந்தனை கலையும் படி செல்போன்களில் பேசக்கூடாது.
 • அஷ்டமி, நவமி, அம்மாவாசை, பௌர்ணமி, மாத பிறப்பு, சோமவாரம், பிரதோஷம், சதுர்த்தி ஆகிய தினங்களில் கண்டிப்பாக வில்வம் பறிக்க கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே வில்வம் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • தெய்வ வழிபாடு ஈரத்துணியுடனும் ஓராடையுடனும் செய்யக் கூடாது.
 • கொடி மரம் தவிர மற்ற இடங்களில் விழுந்து கும்பிட கூடாது.
 • பிரதோஷ நேரங்களில் விழுந்து கும்பிடக் கூடாது.
 • நந்தி தேவருக்கும், சிவ லிங்கதிற்கும் நடுவில் போகக்கூடாது.
 • தரிசனம் செய்தப்பின் பின்னால் சிறிது தூரம் நடந்த பின்னர் திரும்ப வேண்டும்.
 • பெண்கள் கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
Icon

Address

100 Warren StJersey City, NJ 07302
Icon

Hours

Monday - Saturday8:00 AM - 8:30 PM