விபூதி அல்லது திருநீறு அணியும் முறை

திருநீற்றை ஒரு விரலால் தொட்டு நெற்றியில் பொட்டு போல வைத்துக்கொள்ள கூடாது. அதுபோல தண்ணீர் விட்டு குழைத்தும் பூசக் கூடாது.


நெற்றியில் ஒரு கோடிடுபவர்கள் ஆள்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் எவ்வளவு திருநீறு எடுக்க முடிகிறதோ அவ்வளவு எடுத்து நெற்றியில் கோடிட வேண்டும். 
மூன்று கோடு இடுவதற்கு சுண்டு விரல் தவிர்த்து மீதி நான்கு விரல்களால் திருநீரை எடுத்து, பெருவிரல் இல்லாமல் மீதி மூன்று விரலால் நெற்றி முழுவதும் கோடக அணிந்துக்கொள்ள வேண்டும்.


மேலும் தீட்சை பெற்றவர்கள் மட்டுமே திருநீரை தண்ணீர் சேர்த்து குழைத்து அணியலாம். தீட்சை பெறாதவர்கள் கண்டிப்பாக திருநீரை தண்ணீரில் குழைத்து அணிய கூடாது.


தினமும் திருநீறு அணியும் போது “நம் தேகமும் ஒருநாள் இந்த பிடி சம்பலாகத்தான் ஆக போகிறது, ஆகவே இந்த உலக வாழ்வில் அதிக ஆசை கொள்ளாது, பொன் பொருள் மீது ஆசை கொள்ளாது, இறை வழிபாட்டில் மனம் ஒன்றி, ஆன்மா வளம் பெற வாழவேண்டும்.” என்று எண்ணிக்கொள்ள வேண்டும். இதுவே சைவ மதம் போதிக்கும் சிறந்த கோட்பாடாகும்.